பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட பீட்டா பதிப்பில் பிழை இருப்பதாகவும் எனவே அதை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப் சோதனைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பினை விண்டோஸ் ஃபோன்களில் தரவிறக்கம் செய்த பயனாளர்கள் மீடியா கோப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் வாட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பானது இன்னும் தயாராகவில்லை எனவும் சரியாக முடிவுறாத நிலையில் உள்ள இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்யவேண்டாம் எனவும் வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக விண்டோஸ் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்த இயலாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.