டெக்

வாட்ஸ் அப் அப்டேட்ஸ்: வாய்ஸ் மெசேஜ் அனுப்ப சிரமம் வேண்டாம்

வாட்ஸ் அப் அப்டேட்ஸ்: வாய்ஸ் மெசேஜ் அனுப்ப சிரமம் வேண்டாம்

webteam

ஆரம்ப காலத்தில் எஸ்எம்எஸ் வசதியை மட்டுமே கொண்டிருந்த வாட்ஸ் அப் நாளடையில் அது தனது செயல்பாடுகளை அதிகரித்தது. வாட்ஸ் அப்பின் தொடர் அப்டேஷனின் காரணமாக அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. எஸ்.எம்.எஸ், வாய்ஸ் மெசேஞ். வீடியோ காலிங் வசதி என பயணாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப வசதிகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் மெசேஞ்களை முதலில் டெலிட் செய்யும் வசதி இல்லை. அதவாது ஒரு எஸ்.எம்.எஸ்ஸை தவறுதலாக பிறருக்கு அனுப்பிவிட்டால் எதுவும் செய்ய முடியாது.இதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை போக்கும் விதமாக நாம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்களை ஒரு மணிநேரத்திற்குள் அழிக்கும் வசதியை வாட்ஸ் அப் ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் தற்போது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயணாளர்களுக்கு புதிய வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் அந்தச் செயலில் உள்ள மைக் பட்டனை அழுத்திப்பிடித்துக் கொண்டு நாம் பேச வேண்டும்.எவ்வளவு நேரம் பேசுகிறோமோ அதுவரை அந்த பட்டனில் இருந்து கையெடுக்க கூடாது. அவ்வாறு பிடித்துக்கொள்ளாவிட்டால் நாம் பேசியது பதிவாகாது. தற்போது இதற்கு ஒரு தீர்வை வாட்ஸ் அப் தந்துள்ளது. வாட்ஸ் அப்பில் நீங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் போது அந்த பட்டனை நீங்கள் தொட்டவுடன் லாக் போன்ற ஒரு குறியிடு வரும் அதனை பயன்படுத்தி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். இது தற்போது முன்னோட்டமாக பீட்டா வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது.நாளடைவில் அனைத்து வாட்ஸ்அப் பயணாளர்களுக்கும் பயன்பாட்டில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.