உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணைய பயனர்கள் கூகுள் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். காலத்திற்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப அப்டேட்களை அறிமுகப்படுத்தி தமது பயனர்களின் நம்பகத்தன்மையை தக்கவைப்பதில் கூகுளுக்கு நிகர் வேறெதுவுமில்லை. பயனர்களின் பாதுகாப்புக்காக புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்வதில் கூகுள் எப்போதுமே முன்னோடிதான்.
அந்த வகையில், பயனர்களின் லாகின் வசதிக்காக பாஸ்வர்டுக்கு மாற்றாக பாஸ்கீ (Passkey) என்ற ஒரு அம்சத்தை விரைவில் கொண்டு வர உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது கூகுள். இந்நிலையில், உலக பாஸ்வேர்ட் தினத்தை முன்னிட்டு கூகுள் அதன் பயனர்களுக்கு பாஸ்கீ ஆதரவை வழங்கத் தொடங்கியிருக்கிறது. பாஸ்வர்டுக்கு மாற்றாக பாஸ்கீ அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இணைய உலகில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பாஸ்கீ என்றால் என்ன? எப்படி அது செயல்படுகிறது? பாஸ்கீ அறிமுகத்தால் பாஸ்வேர்டு முறை இனி இருக்காதா..? என்பதைக் குறித்துப்ப் பார்க்கலாம்..
பாஸ்கீ என்றால் என்ன?
பாஸ்கீ என்பது பாஸ்வேர்டுக்கான ஒரு பாதுகாப்பான மாற்று என்கிறது கூகுள். பாஸ்வேர்டு எப்போதுமே பாதுகாப்பற்றது தான். எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் பாஸ்வேர்டை திருடி அல்லது லேப்டாப், செல்போன்களை ஹேக் செய்து தகவல்களை திருட முடியும். அதனால் தான் பாஸ்வேர்டுகளை உருவாக்கும் போது வலுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள். எனவே தான், பயனர்கள் பாஸ்வேர்டிற்கு பதிலாக பாஸ்கீயை பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் முடிவு செய்துள்ளது.
கூகுளின் கூற்றுப்படி, பாஸ்கீயை மீண்டும் பயன்படுத்த முடியாது, அது எங்கும் லீக் ஆகாது; ஃபிஷிங் அட்டாக்களில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி பாஸ்கீ-யில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது, அது என்னவென்றால், அவைகள் வெவ்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் ப்ரவுசர்களில் இருந்தும் வேலை செய்யும். மேலும் வெப்சைட்டுகள் மற்றும் ஆப்கள் என இரண்டிலுமே பயன்படுத்தலாம்.
பாஸ்கீ எவ்வாறு செயல்படுகிறது?
இனி கூகுள் மெயில் உள்ளிட்ட கணக்குகளுக்கு பாஸ்வேர்டுகளை நினைவு வைத்துக்கொள்ள தேவையில்லை. ஃபிங்கர் பிரின்ட், ஃபேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் பின் போன்ற வசதிகளைக் கொண்டே கூகுள் கணக்குகளை இயக்க முடியும். கூகுள் குரோமில் உள்ள பாஸ்வேர்டு மேனேஜர் பகுதியில் பாஸ்கீக்கள் சேமித்து வைக்கப்படுகிறது. அதே சமயம் பாஸ்வர்டு முறை ஒழித்துக்கட்டப்படவில்லை. பயனர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பாஸ்கீயை பயன்படுத்தலாம். பாஸ்வர்டு , 2 step verification போன்ற முந்தைய வழிகளிலும் கூகுள் அக்கௌன்ட்களில் பயனர்களால் sign in செய்ய முடியும் என விளக்கம் அளித்திருக்கிறது கூகுள்.