நாளை நிலவில் ஒரு அதிசயம்...
நாளை வானில் சூப்பர் மூன் தோன்ற உள்ளது. என்னது சூப்பர் மூனா... என்னால் பார்க்க முடியாதே... என்று நினைப்பவர்களுக்காக, சூப்பர் மூன் செப்டம்பர் 18, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளில் வானில் தெரிய உள்ளது.
சரி, சூப்பர் மூன் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
நிலவானது தனது குறைந்த பட்ச தூரமான பெரிஜி எனப்படும் 3,64,000 கி.மீ தூரத்தில் பூமிக்கு மிக அருகில் வரும் பொழுது சூப்பர் மூனாக தெரியும். அச்சமயம் சாதாரண நிலவை விட வானத்தில் பெரிதாகவும் பிரகாசமான நிலவாக தோன்றும்.
சூப்பர் மூன் என்று இதற்கு பெயரை வைத்தவர் ஆங்கில ஜோதிடர்.
"சூப்பர் மூன்" என்ற சொல் முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் ஜோதிடர் ரிச்சர்ட் நோலே என்பவரால் சொல்லப்பட்டது, இந்த முழு சூப்பர் மூன்கள் இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான முழு நிலவுகளாகும். அவை வழக்கத்தை விட தோராயமாக 30% பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் தோன்றும்.
ப்ளூ மூன்
நீல நிலவு என்பது ஒருகாலண்டர் மாதத்தில் இரண்டாவது முழு நிலவை குறிக்கிறது.
அதாவது ஒரு மாதத்தில் பூமிக்கு மிக அருகில் இரண்டு முறை நிலவு வந்தால் முதல் நிலவை சூப்பர் மூன் என்கிறோம் இரண்டாவது முறை அதை ப்ளூ மூன் என்கிறோம். அதற்காக இரண்டாவது நிலவு நீல நிலவாக தெரியாது...
எங்கு, எப்பொழுது பார்க்கலாம்
வட அமெரிக்காவில் நாளை அதாவது ஆகஸ்ட் 19ம் தேதி மதியம் இந்திய நேரப்படி சுமார் 2.26 மணிக்கும்
இந்தியாவில் நாளை அதாவது ஆகஸ்ட் 19 இரவு முதல் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை நாம் சூப்பர் மூனை காணலாம்.
ஈர்ப்பு விசை:
பொதுவாக அம்மாவாசை பவுர்ணமி தினங்களில் கடல் அலைகளில் வேறுபாட்டை காணலாம். அன்றைய தினங்களில் நிலவின் முழு ஈர்ப்பு சக்தியானது நேரடியாக பூமியின் மீது விழுவதால் இந்த வேறுபாட்டை காணலாம். அது போன்று நாளை முழுநிலவு அதுவும், பூமிக்கு மிக நெருக்கமாக வருவதால் அதன் ஈர்ப்பு சக்தியானது வழக்கத்தைவிட சற்று அதிகமாக காணப்படும் அப்பொழுது கடல் அலைகளின் எழுச்சியும் வழக்கத்திற்கு மாறாக சற்று கூடுதலுடன் காணப்படும்.
பூமியை விட்டு விலகும் நிலவு
ஆனால் தற்பொழுது விஞ்ஞானிகளின் ஆய்வின் படி நிலவு கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி செல்வதாக கூறுகிறார்கள். இதனால் பூமியின் மீதான நிலவின் ஈர்ப்பு விசையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும் என்றும் அதனால் பூமியானது தன்னை தானே மெதுவாக சுற்றிக்கொள்ளும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் ஒரு நாளானது 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதிகரிக்கும் என்கிறார்கள். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 1600 ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒப்பிட்டால் சராசரியாக ஒரு நாளின் நீளமானது 1.09 மில்லி விநாடி கூடியுள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
ஆக நேரமில்லை நேரமில்லை என்று நாம் புலம்புவது அந்த நிலவு வரை ஒலித்திருக்க வேண்டும். ஆகவேதான் நிலவு நமக்கு நேரத்தை வழங்குவதற்காக விலகி செல்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.