டெக்

இந்தியாவில் களம் இறங்கும் வியூ10 !

webteam

போன் பிரியர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹூவாய் ஹானர் நிறுவனத்தின், ஹானர் வியூ10 ஸ்மார்ட் போன் ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகிறது. 

ஸ்மார்ட்போன் தவிர்க்க முடியாத சாதனமாக இன்று மாறி வருகிறது. புதிய அப்டேட்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி வருகின்றன. சாம்சாங், ஐ போன் போன்ற சர்வதேச நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

இந்த களத்தில் ஹூவாய் ஹானர் நிறுவனமும் தற்போது இறங்கி உள்ளது. சமீபத்தில் சீனாவில் அறிமுகமான ஹானர் வி10 -ன் சர்வதேச பதிப்புதான், இந்த ஹானர் வியூ10. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ஜனவரி 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் 40,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவர இருக்கும் இந்த போன், பிரத்யேக நியூரல் நெட்வொர்க் பிராசஸிங் யூனிட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 

13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 3750 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி,5.99 இன்ச் ஃபுல் எச்டி, 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆகிய சிறப்பம்சங்கள் ஹானர் வியூ10- ல் இடம்பெற்றுள்ளது.