டெக்

வீடியோ காலிங் பேசிக்கொண்டே மெசேஜ் அனுப்பலாம்... வாட்ஸ் அப் அப்டேட்!

வீடியோ காலிங் பேசிக்கொண்டே மெசேஜ் அனுப்பலாம்... வாட்ஸ் அப் அப்டேட்!

webteam

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம்.

பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் (PiP) என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ கால் திரையை சிறிதாக்கி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும்.

முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவேற்றம் செய்யும் வசதியை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த ஸ்டேட்டஸ்களில் டெக்ஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளும் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் வாட்ஸ்அப்பில் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடுமோ அதேபோல் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும்.