ஐபோன்களில் iOS 14 மொபைல் இயங்கு தளம் கொண்ட போன்களில் டெக்ஸ்ட் மெசேஜஸ், ஐ மெசேஜஸ் மற்றும் வாட்ஸ் அப் மாதிரியான செயலிகளின் நோட்டிபிகேஷன்கள் வருவதில்லை என ஆப்பிள் ஐபோனின் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக இது தொடர்பான புகார்களை iOS 14 இயங்கு தளம் கொண்ட ஐபோன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
iOS 14 வெர்ஷனுக்கு தங்களது போனை அப்லோட் செய்த பயனர்கள் பெரும்பாலானோர் இந்த குறைபாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாப் அப் மற்றும் திறந்து பார்க்காத செய்திகளின் ரெட் பேட்ஜ் கூட தங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை எனவும் சில பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில பயனர்களுக்கு குறுஞ்செய்தியான டெக்ஸ்ட் மெசேஜஸ், ஐ மெசேஜஸ் மட்டுமல்லாது வாட்ஸ் அப் மாதிரியான அப்ளிகேஷன்கள் நோட்டிபிகேஷனும் கிடைப்பதில்லை என புகார்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சில பயனர்களால் தொலைபேசி அழைப்புக்கான நோட்டிபிகேஷனை கூட கிடைப்பதில்லை என சொல்லியுள்ளனர்.
இந்த சிக்கலை ஐபோன் பயனர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் எதிர்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. சிலர் இதனை ஆப்பிள் கம்யூனிட்டி ஃபாரம் மட்டுமல்லாது ட்விட்டர் மாதிரியான தளங்களிலும் இந்த புகாரை பயனர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் iOS 14.3 வெர்ஷனை ஆப்பிள் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது.