மிராண்டா நிலவு நாசா
டெக்

“யூரோப்பா நிலவை தொடர்ந்து, மிராண்டா நிலவிலும் உயிரினங்கள் இருக்கலாம்” - நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை!

“யூரோப்பா நிலவைத் தொடர்ந்து, மிராண்டா நிலவிலும் உயிரினங்கள் இருக்கலாம்” - என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Jayashree A

சமீபத்தில் வியாழனின் துணைக்கோளான யூரோப்பாவில் (வியாழனைச் சுற்றி வரும் நிலவு என்றும் சொல்லப்படும்) பனிக்கட்டிக்கு அடியில் மிகப்பெரிய உப்புக்கடல் இருப்பதாகவும், அதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இதன்பேரில் யூரோப்பாகிளிப்பர் என்ற செயற்கைகோளை, யூரோப்பாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பியுள்ளனர். இந்த செயற்கைகோளானது 2030 ஆண்டு யூரோப்பா அருகில் செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆராய்ச்சியாளார்கள் பனியாலான மற்ற கிரகங்களையும் ஆராய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் நார்த் டகோட்டா பல்கலைக்கழகமும் இணைந்து சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டன.

இவர்களின் ஆராய்ச்சியின்படி யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் மிராண்டா என்ற நிலவு அடர்ந்த பனியினால் காணப்படுகிறது. இதன் மேற்பரப்பில் கடல் இருக்கலாம் என்று நம்புகின்றனர். இதனால் அங்கு உயிரினங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

1986-ம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலமானது யுரேனஸை அருகில் சென்று படம் பிடித்தது. அத்துடன் யுரேனஸை சுற்றி வரும் மிராண்டா நிலவையும் படம் பிடித்து அனுப்பியது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.

அவர்களின் கூற்றுப்படி மிராண்டா பனிக்கட்டி நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 100 முதல் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கலாம் என்கின்றனர். தற்பொழுது சிறிய அளவில் நீர் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல கிரக விஞ்ஞானி டாம் நார்ட்ஹெய்ம், என்பவர் இந்த கண்டுபிடிப்பு குறித்து தனது பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.