கோள்கள் நாசா
டெக்

அறிவோம் அறிவியல் 10| மேற்கில் சூரியன்.. ஒரு நாளிற்கு 17 மணி நேரம்! வியப்பூட்டும் யுரேனஸ் கிரகம்!

Jayashree A

தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...

அறிவோம் அறிவியலில் இன்று நாம் பார்க்கபோவது யுரேனஸ் கிரகம் பற்றி...

நமது சூரிய குடும்பத்தில் யுரேனஸ் ஏழாவது கிரகமாகும். 1781 ஆண்டு வானியலாளரான வில்லியம் ஹெர்ஷலால் என்பவர், தொலைநோக்கியின் உதவியால் இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளார். முதலில் இதை அவர் வால் நட்சத்திரம் என்று நினைத்தாராம். அதன் பிறகு வந்த அறிவியலாலர் இதை ஒரு கோள் என்று கூறினர்.

இது சூரியனை விட்டு நீண்ட தூரம் தள்ளி இருப்பதால் இதில் பனி அதிகம். ஆகவே இங்கு வாழ்வதென்பது முடியாத ஒன்று. இருந்தாலும் இதில் என்னென்னெ அம்சம் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தூரம்:

பூமியை விட நான்கு மடங்கு அளவில் பெரியது. சுமார் 51,118 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதனால் சூரியனை சுற்றிவர 30,687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒருமுறை இது சூரியனை சுற்றி வருவதற்குள் பூமியில் பலபேரின் வாழ்க்கையே முடிந்துவிட்டிருக்கும். ஆனால் ஒரு நாள் என்பது வெறும் 17 மணி நேரம்தான். அத்தனை வேகமாக சுழல்கிறது. எல்லா கிரகமும் இடக்கோணத்தில் சாய்ந்தபடி சுற்றி வருகிறது என்றால் இதுமட்டும் வலக்கோணத்தில் சாய்ந்தபடி சுற்றி வருகிறது. இதற்கு காரணம் இந்த கிரகம் தோன்றும் பொழுது வேறொரு கிரகத்துடன் மோதியதால் சாய்ந்து இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இது சூரியனை சுற்றி வர 84 ஆண்டுகள் எடுத்துக்கொள்வதால், இங்கு தட்பவெட்ப நிலையும் ஆண்டுகள் வரை நீடித்து இருக்கும். சுக்கிரன் போல இதுவும் எதிர் திசையில் சுற்றுகிறது அதனால் இங்கு மேற்கில் உதிக்கும் சூரியன் கிழக்கில் மறையும்.

நிலவுகள்

இதற்கு 28 நிலவுகள் உள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த நிலவுகள் பெரும்பாலும் பாதி பனி அடர்ந்த பகுதியாகவும் பாதி பாறையாகவும் தெரிவதாக கூறுகின்றனர். யுரேனஸ் இந்த பேரை கேட்டதுடன் ஏனோ ஷேக்ஸ்பியர் நியாபகம் வருகிறதா.... ஆம்... வில்லியம் ஷேக்ஸ்பியர் அலெக்சாண்டர் போப்பின் கதைகளில் இந்த பெயரை அடிக்கடி பார்க்கலாம்.

மோதிரங்கள்

இதற்கு இரண்டு செட் மோதிரம் உள்ளது. இந்த மோதிரங்களுக்கு Zeta, 6, 5, 4, Alpha, Beta, Eta, Gamma, Delta, Lambda, Epsilon, Nu மற்றும் Mu என்று இதற்கு பெயரும் உண்டு. சில பெரிய வளையங்கள் மெல்லிய தூசி பட்டைகளால் சூழப்பட்டுள்ளன.

உருவாக்கம்

மற்ற கிரகங்களைப்போல இதுவும் சூரியனிலிருந்து உருவானது என்றாலும், இதன் ஈர்ப்பு சக்தியானது சுழலும் வாயு மற்றும் தூசியை இழுத்து பனி அடர்ந்த ராட்சத கிரகமாக மாறியுள்ளது.

இதன் அமைப்பு

இந்த கிரகம் 80% பனிபாறையை கொண்டிருக்கிறது. இதில் நீர், மீத்தேன், அம்மோனியா ஆகியன சூடான அடர்த்தியான திரவத்தால் ஆனது. இதன் வளிமண்டலத்தில் இருக்கும் மீத்தேன் வாயுவால் யுரேனஸ் பார்ப்பதற்கு நீலம் கலந்த பச்சை கிரகத்தைப்போன்று காணப்படுகிறது.

மேற்பரப்பு

இதற்கு உண்மையான மேற்பரப்பு இல்லை. இதுவும் வியாழனைப்போன்று திரவங்களை கொண்டு சுழல்கிறது. அதாவது இதில் தரைபரப்பு இல்லை. ஆகையால் இந்த கிரகத்திற்கு சென்றால் ஒன்று பறந்தபடி இருக்கவேண்டும் அல்லது மிதந்தபடி இருக்கவேண்டும். என்னது... எனக்கு பறக்கவும் வராது மிதக்கவும் வராது என்கிறீர்களா... முதலில் அதற்குள் போகமுடியுமா என்பதை யோசிக்கவேண்டும். காரணம் இதனுள் இருக்கும் பொல்லாத வாயுக்கள் நம்மை சிதைத்துவிடும்.

வாயேஜர் 2 என்ற விண்கலம் 1986ல் இதனை தள்ளிநின்று ஆராய்ச்சி செய்தது. இதன் ஆராய்சியில், இதற்குள் இரண்டு கரும் புள்ளிகளை கண்டதாம். இதன் வெப்பநிலை -224.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கொண்டிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமாம். இந்த காற்றும் வெவ்வேறு திசைகளில் அதாவது பூமத்திய ரேகையில் பின்னோக்கியும், சில இடங்களில் மேலிருந்து கீழ்நோக்கியும் என்று அதன் போக்கில் வீசுமாம்.

காந்தமண்டலம்:

இதில் காந்தமண்டலம் ஒழுங்கற்ற நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தகாந்தமண்டலமானது விண்வெளியில் ஒரு வால் போல நீண்டு மில்லியன் கணக்கான மைல்தூரத்திற்கு இருக்கிறதாம் . அடடே... என்கிறீர்களா... ஆம்... அடுத்த வாரத்தில் நெப்டியூன் பற்றி பார்கலாம்.