டெக்

M சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் சாம்சங்?

M சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் சாம்சங்?

EllusamyKarthik

M சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்தவாரம் சாம்சங் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அடுத்தவாரம் M சீரிஸ் ஸ்மார்ட்போனில் புது மாடலை வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனேகமாக அது கேலக்சி M12 அல்லது M62 மாடலாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி அன்று கேலக்சி S21 மாடல் போனை சாம்சங் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாக இந்த M சீரிஸ் போன் அறிமுகமாக உள்ளதாம்.

7000 மிலியாம்ப் திறன் கொண்ட பேட்டரி M12 மாடலில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிகிறது. நொய்டாவில் உள்ள உற்பத்தி கூடத்தில் இந்த மாடல் போன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 6.7 இன்ச் டிஸ்பிளே இந்த போனில் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளதாம். நீண்ட நேரம் நீடித்து நிற்கும் பேட்டரி தான் இந்த போனின் தனித்துவம் எனவும் சொல்லப்படுகிறது.