கலிலியோ தொலைநோக்கி கூகுள்
டெக்

அறிவோம் அறிவியல் 16 | நட்சத்திரங்களை ஆராயும் முக்கிய தொலைநோக்கிகள் என்னென்ன தெரியுமா?

இந்த வார அறிவோம் அறிவியல் தொடரில், கிரகங்களை கண்டுபிடிக்கும் தொலைநோக்கிகளைப்பற்றி பார்க்கலாம்.

Jayashree A

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை அருகினில் பார்க்க அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். சிலர் அதற்காக விலைக்கொடுத்து தொலைநோக்கியை வாங்கி இரவு நேரத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்தும் வருவார்கள். இதே ஆர்வம்தான் கலிலியோவிற்கும் இருந்தது. வானத்தில் எப்படி நட்சத்திரங்கள் இருக்கின்றன? அவை எங்கிருக்கிறது? என்று பல சந்தேகங்கள் அவருக்குள் எழுந்தது. அதன் விளைவாக அவர் தொலைநோக்கியை உருவாக்கி அதன் மூலம் நட்சத்திரங்களை ஆராய்ந்து வந்தார். இவர்தான் தொலைநோக்கிகளுக்கு முன்னோடி எனலாம்.

கலிலியோ

அதன்பிறகு வந்த பல்வேறு ஆய்வாளர்கள் அதிநவீன தொலைநோக்கியின் உதவியால் பல ஒளி ஆண்டுகளுக்கும் தொலைவில் இருக்கும் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாசா பல தொலை நோக்கியை உருவாக்கி அதன்மூலம் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

அந்தவகையில் நாசா வைத்திருக்கும் தொலைநோக்கிகள் எவை எவை என்று பார்க்கலாம்.

1. ஹப்பிள்.

2.ஸ்விஃப்ட் காமா ரே பர்ஸ்ட் எக்ஸ்ப்ளோரர்

3.டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட் (TESS)

4.சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்

5.ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி

6.நுஸ்டார் (நியூக்ளியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அரே)

தொலைநோக்கிகள்

7.சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நியூட்ரான் நட்சத்திரத்தின் உட்புற கலவை எக்ஸ்ப்ளோரர்

8.இமேஜிங் எக்ஸ்ரே போலரிமெட்ரி எக்ஸ்ப்ளோரர் (IXPE)

9. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி.

இப்படி 9 வகை தொலைநோக்கிகளை நாசா வைத்திருக்கிறது. இதன் மூலம், பல மில்லியன் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களையும் நட்சத்திர கூட்டங்களையும் ஆராய்ந்து, அதன் தோற்றம் அதன் உருவாக்கம் முதலியவற்றை ஆராய்ந்து வருகிறது.

ஹப்பிள் தொலைநோக்கி

இந்த தொலைநோக்கி வளிமண்டலங்களில் இருக்கும் எக்ஸோபிளானட்டை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கெப்லர் மற்றும் கே2

இந்த தொலைநோக்கியும் எக்ஸோபிளானட்டை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக இருக்கிறது. 2009 முதல் 2013வரை சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களைக் கண்காணித்து வந்தது. சுமார் 2,600க்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு உதவியுள்ளது.

ஸ்பிட்சர் ஸ்பெக்ட்ரமின் அகச்சிவப்பு

இந்த தொலைநோக்கியானது வானத்தை ஆராய்வதில் முக்கியத்துவம் பெற்றது. வானத்தில் இருக்கும் அடர்த்தியான தூசி மேகங்களுக்குள் புதிதாக பிறக்கும் நட்சத்திரங்களின் படங்களை கைப்பற்றுகிறது. ஆனால் இதன் பயனானது 2020ல் நிறுத்தப்பட்டது.

மேலும் தொலைநோக்கிகளைப்பற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்...