டெக்

குரல் மூலம் அரட்டை அடிக்க ‘ஸ்பேசஸ்’ அரங்கத்தை அறிமுகம் செய்த ட்விட்டர்

குரல் மூலம் அரட்டை அடிக்க ‘ஸ்பேசஸ்’ அரங்கத்தை அறிமுகம் செய்த ட்விட்டர்

EllusamyKarthik

சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் டேரெக்ட் மெசேஜ் சேவையில் வாய்ஸ் சேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் குழுவாக குழுமி குரல் மூலம் கலந்துரையாடும் ஸ்பேசஸ் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ட்விட்டர் பயனர்கள் குழுவாக கூடி பேசி மகிழலாம். முதலில் ஐபோன் பயனர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இது இருந்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களும் இதை பயன்படுத்தலாம். 

இதில் ஏதேனும் ஒன்று முதல் 10 பயனர் வரை ஹோஸ்ட் செய்யும் ஸ்பேஸில் பல பயனர்கள் கவனிப்பவர்களாக (Listeners) இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷனாக அறிமுகமான இந்த ஸ்பேஸ் அம்சத்தில் இப்போதைக்கு பயனர்கள் இணையவும், பேசவும் மட்டும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயனர்கள் அவர்களது ஸ்பேஸை உருவாக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே தென்படும் ஸ்பேஸ் ஐகானை லாங் பிரெஸ் செய்து இந்த லைவ் வாய்ஸ் கலந்துரையாடலில் பயனராகவும், ஹோஸ்டாகவும் இணையலாம் என தெரிகிறது. இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தெரிகிறது. இருப்பினும் ஹோஸ்டின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பயனரை பிளாக் செய்யும் வசதியும் உள்ளதாம். இனி ட்விட்டரில் அரட்டை பேச்சுகள் கலை கட்டும்.