டெக்

பாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிப்பு

பாசி மூலம் விமான எரிபொருள்: ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிப்பு

webteam

ஜப்பானைச் சேர்ந்த யூக்ளினா எனும் நிறுவனம் ஒரு வகை பாசி மூலம் விமான எரிபொருள் தயாரிப்பு சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளது.

உணவு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தும் வகையிலான பாசி ஒன்றினை பயிரிடுவதில் அந்த நிறுவனம் சமீபத்தில் வெற்றி கண்டது. அதேநேரம், அந்தவகை பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்க முடியும் என்று யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தற்செயலாகக் கண்டறிந்தனர். இதுகுறித்து யூக்ளினா நிறுவனத்தின் நிறுவனர் மிட்சுருஜுமோ கூறுகையில், குறிப்பிட்ட அந்தவகை பாசியினை பொடியாக்கி, அதன்மூலம் மண்ணெண்ணெய் போன்றதொரு வேதியியல் கலவை கொண்ட திரவத்தினை தயாரிக்க முடியும் என்றார். அந்த கலவையினை விமானத்தின் எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பானைச் சேர்ந்த ஏஎன்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் இந்த உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலையினை யூக்ளினா நிறுவனம் அமைத்துள்ளது. அந்த சுத்திகரிப்பு ஆலையின் உதவியுடன் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் அளவுக்கு விமான எரிபொருளினைத் தயாரிக்க யூக்ளினா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.