ஹரால்ட் புளூடூத் File image
டெக்

ப்ளூடூத் பெயரும் லோகோவும் வந்ததற்கு காரணம் ஒருவரின் பற்கள் என்றால் நம்பமுடிகிறதா? சுவாரஸ்ய உண்மை!

Bluetooth என நாம் அறியும் தொழில்நுட்ப பெயருக்கும் அதன் சிம்பளுக்கும் காரணம், ஒரு அரசரின் பற்கள்தான் என்றால் நம்பமுடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! அதைப்பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

Jayashree A

”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், அக்காலகட்டத்திற்குள்ளேவும் டென்மார்க் மற்றும் நார்வேயை ஒன்றிணைத்திருக்கிறார் இவர்.

Harald Bluetooth Gormsson

இவரது புனைப்பெயர் ப்ளூடூத் என்றும் ப்ளாக்டூத் என்றும் சொல்லப்படுகிறது. அரசர் ப்ளூடூத் மிகவும் குறுகிய காலத்தில் டென்மார்க்கையும் நார்வேயையும் இணைத்தது போலவே... ப்ளூடூத் தொழில்நுட்பம் பல்வேறு மின்னணு சாதனங்களை குறுகிய காலத்தில் ஒன்றிணைக்கிறது. அதனாலேயே அறிவியல் விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்திற்கு ப்ளூடூத் என்று பெயரிட்டுள்ளனர்!

அதுசரி... இவருக்கு எப்படி ப்ளூடூத் என்ற புனைப்பெயர் ஏன் வந்தது?

இவரின் பற்கள் பார்ப்பதற்கு மிகவும் மோசமடைந்து கருநீல நிறத்தில் இருக்குமாம். அதனாலேயே இவருக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

இவரின் பற்கள் இந்த அளவு மோசமானதற்கு காரணம் அவுரிநெல்லி (Blueberry) என்கிறார்கள். ஆம் அவுரிநெல்லி என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அதை விடாது சாப்பிட்டு வந்ததால் இவரின் பற்கள் கரைபடிந்து நீலநிறத்தை பெற்றதாக வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

இதுவொரு புறமென்றால், ப்ளூடூத்தில் இருக்கும் லோகோவானது, Hagall (*) மற்றும் Bjarkan (B) என்ற அவர் பெயரின் இனிஷியலை குறிக்கின்றன. இவை ரூனிக் குறியீடும்கூட! இவற்றை இணைத்து தான் ப்ளூடூத்தின் லோகோவானது உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கரை நல்லது என்பது இவருக்கு சரியாகத்தான் பொருந்துகிறது, இல்லையா!