டெக்

நாளை பகுதிநேர சூரிய கிரகணம்

நாளை பகுதிநேர சூரிய கிரகணம்

webteam

பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் அருகில் வந்த வானியல் அதிசயத்தை தொடர்ந்து, நாளை சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் தேதி மிக நீண்ட சந்திர கிரகணம்  ஏற்பட்டது. பின்னர் அண்மையில் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழ்ந்ததை அடுத்து, 31 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்தது. இந்தத் தொடர் அதிசய நிகழ்வுகளை அடுத்து நாளை மீண்டும் பகுதி நேர சூரிய கிரணம் நிகழவுள்ளது. சரியாக மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் கிரகணம் மாலை 5.02 மணி வரை நீடிக்கவுள்ளது. 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனால் பூமியில் சூரியன் ஒரு வட்ட வடிவத்தில் தெரியும். அதாவது கிரகணம் நிகழும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சூரியனில் வைர மோதிரம்‌ போன்ற‌ அரிய காட்சி தோன்றும்.

அப்போது பளிச்சென்ற ஒளி பூமியின் மீது விழும். இந்த நிகழ்வை அறிவியல் ஆய்வாளர்கள் 'வைர மோதிர நிகழ்வு' என கூறுகின்றனர். இந்தப் பகுதி நேர சூரிய கிரகணத்தை சைபீரியாவில் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும் என்றும் இந்தியாவில் தெளிவாக தெரியாது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.