டெக்

வரும் 17-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்ட் CE 2 ஸ்மார்ட்போன்

வரும் 17-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நார்ட் CE 2 ஸ்மார்ட்போன்

EllusamyKarthik

வரும் 17-ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் CE 2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் இரண்டு டிவியையும் அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். அன்று மாலை 7 மணி அளவில் இந்த டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்பிளஸ் நார்ட் CE 2

65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி சப்போர்ட் மாதிரியானவற்றை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு நாள் முழுவதற்குமான பவரை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC, 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் AMOLED டிஸ்ப்ளே, ரியர் சைடில் மூன்று கேமரா, 3.5mm ஹெட்போன் ஜாக், 6ஜிபி மற்றும் 8ஜிபி கொண்ட ரேம் வேரியண்ட் வசதி மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளதாக தகவல். 

OnePlus TV Y1S மற்றும் Y1S Edge என்ற இரண்டு தொலைக்காட்சிகள் இந்த ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த டிவியை ஒன்பிளஸ் நிறுவனத்தின் வாட்ச் மற்றும் பட்ஸ்களில் கனெக்ட் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.