டயனோசர்கள் விண்கல்
டெக்

டயனோசர்களை அழித்த Chicxulub சிறுகோள் எங்கிருந்துவந்தது? புதிய தகவலால் திகைப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

சுமார் அறுபத்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சிறுகோள் மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தை தாக்கி பல உயிரினங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. அதில் முக்கியமானது டைனோசர்கள் .

Jayashree A

சுமார் அறுபத்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சிறுகோள் மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தை தாக்கி பல உயிரினங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. அதில் முக்கியமானது டைனோசர்கள் . இது ஒரு புறம் இருந்தாலும். இந்த சிறுகோள் பற்றி விஞ்ஞானிகள் பல ஆண்டுகாலம் ஆராய்ந்து வந்தனர். தற்பொழுது இதைப்பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அது என்ன என்று பார்க்கலாம்.

சுமார் அறுபத்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தை Chicxulub என்ற சிறுகோள் தாக்கியது. இதனால், அப்பகுதியில் வாழ்ந்து வந்த பறவைகளைத்தவிர, ஏராளமான விலங்கினங்கள் குறிப்பாக டைனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் ட்ரைசெராடாப்ஸ், பறக்கும் டெரோசர்கள் போன்ற டௌனோசர் இனங்கள், கடற்பரப்பு கொசாசர்கள், ஊர்வன போன்ற முக்கிய விலங்குகள் சுமார் 75% அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பூமியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்த சிறுகோள் பற்றிய ஆய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த சிறுகோள் மோதலால் பூமியில் பல மாற்றங்கள் நிகழந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக, இந்த சிறுகோளானது நமது சூரிய குடும்பத்தைத் தாண்டி உருவான ஒரு கல்லாக இருக்கலாம் என்பது பல வருடங்களாக விஞ்ஞானிகளுக்கு இருந்த சந்தேகம். காரணம், பூமியைத் தாக்கும் அனைத்து விண்கற்களில் 80 சதவிகிதம் S-வகை சிறுகோள்களிலிருந்து பெறப்பட்டவை அல்லது சூரிய மண்டலத்தின் உள் பகுதியிலிருந்து வந்தவை ... ஆனால் இந்த சிறுகோள் அந்தவகையை சார்ந்ததில்லை என்கிறார்கள்.

S வகை சிறுகோள் என்றால் என்ன?

S-வகை சிறுகோள்கள் ஒரு ஸ்பெக்ட்ரல் வகை கொண்ட சிறுகோள்களாகும் , அவை சிலிசியஸ் (அதாவது ஸ்டோனி) கனிம கலவையைக் குறிக்கின்றன, எனவே இவை ஒப்பீட்டளவில் அதிக அடர்த்தி கொண்டவை. ஏறக்குறைய 17% சிறுகோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை,

ஆனால் விஞ்ஞானிகளின் ஆய்வில் Chicxulub சிறு கோளானது ஒரு கார்பனேசிய காண்ட்ரைட் விண்கல் என்று புவியியல் தடயங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே Chicxulub சிறு கோள்கள் சி-வகை சிறுகோள் என்று கூறுகின்றனர். இதில் அதிகளவு கார்பன் மற்றும் கரிம சேர்மங்கள் இருக்கிறது.

விஞ்ஞானத்தில் இன்று வெளியிடப்பட்ட புதிய பகுப்பாய்வின்படி, அழிவைத் தூண்டிய சிறுகோள் நமது சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தில் உருவான கார்பனேசியஸ் காண்ட்ரைட் விண்கல் என அடையாளம் காட்டுகிறது. ஆகவே வல்லுநர்கள் இத்தகைய விண்வெளிப் பாறைகளின் பகுதிகளை சி-வகை சிறுகோள்கள் என்று குறிப்பிடுகின்றனர் .

இப்பொழுது புவியியலாளர்களின் ஆய்வு படி பேரழிவு தந்த சிறுகோளானது வியாழன் கிரகத்தைத்தாண்டி வந்து இருக்கலாம், இது சூரியகுடும்பத்து சிறுகோள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதற்கு காரணத்தையும் கூறியுள்ளனர்.

மெக்சிகன் கடற்கரைக்கு அடியில் சிக்சுலுப் என்று அழைக்கப்படும் பள்ளத்தை புவியியலாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். இதில் டிரெட்டேசியஸைப் பிரிக்கும் பாறையின் அடுக்கில் உள்ள இரிடியம் மற்றும் ருத்தேனியம் என்ற உலோகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த இரிடியம் மற்றும் ருத்தேனியம் உலோகமானது பூமியிலிருந்து பெறப்படும் மிகமிக அரிதான உலோகம். இவை பெரும்பாலும் விண்கற்கள் மற்றும் சிறுகோள்களில்தான் அதிகமாக காணப்படுகிறது.

மேலும், Chicxulub சிறு கோள்கள் தாக்கத்தால் சிறுகோளில் இருந்த இரிடியம் மற்றும் ருத்தேனியம் போன்ற உலோகம் பரவலாக அப்பகுதியில் இருக்கும் பாறைகளில் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆகவே... Chicxulub என்ற சிறுகோள் மோதும் பொழுது பூமியில் பெரும் அழிவை ஏற்படுத்தியதுடன் அதன் அந்த சிறுகோளில் இருந்த உலோகம் சிதறி பூமியில் இருந்த பாறைகளில் அடுக்குகளாக பரவியிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆகவே பூமியில் ஒரு பகுதியில் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், இரிடியம் மற்றும் ருத்தேனியம் போன்ற தனிமங்களை கொண்டு கொடுத்துள்ளது இந்த Chicxulub என்ற சிறுகோள்.