சர்வதேச விண்வெளி நிலையம் நாசா
டெக்

அடேங்கப்பா இவ்ளோ பேரா..! விண்வெளி நிலையத்தில் பல மாதங்களாக தங்கி செயல்பட்டு வரும் வீரர்கள் பட்டியல்!

Jayashree A

விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும், புட்ச் வில்மோர் திட்டமிட்டப்படி பூமிக்கு வரமுடியாத நிலையில், அவர்கள் விண்வெளியிலேயே தங்கி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளி நிலையத்தில், இவர்களுக்கு தேவையான உணவு மற்றும், ஆக்ஸிஜன் இருப்பதாகவும், ஆகவே இருவரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா கூறியிருக்கிறது.

இந்நிலையில் விண்வெளியில் ஏற்கனவே இருக்கும் வீரர்கள் யார் யார்? அவர்கள் எத்தனை காலம் அங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ஓலெக் கொனோனென்கோ :

ஓலெக் கொனோனென்கோ

60 வயதானஇவர் ரஷ்ய விண்வெளி வீரர், சோயுஸ் விண்கலத்தின் மூலம் ஐந்துமுறை சர்வதேச விண்வெளி நிலயத்திற்கு சென்று வந்தவர். விண்வெளியில் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தங்கி அங்கு ஆராய்ச்சியை செய்துக்கொண்டிருக்கிறார்.

நிகோலாய் சப்

நிகோலாய் சப்

40 வயதான இவரும் ரஷ்ய விண்வெளி வீரர். இவரும் ஒரு வருடத்திற்கு மேலாக விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள்.

டிரேசி கால்டுவெல்-டைசன்

55 வயதான இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் விண்வெளி வீரராவார். கிட்டத்தட்ட மூன்று முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி ஆறுமாத பயணமாக ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளிக்கு சென்றவர்.

மேத்யூ டொமினிக்,

மேத்யூ டொமினிக்,

42 வயதான இவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 8 மிஷனில் விண்வெளிக்கு சென்றவர் கிட்டத்தட்ட 170 நாட்களை கடந்து விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

மைக்கேல் பாராட்:

65 வயதான இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரும் கடந்த மார்ச் 4ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 8 ல் விண்வெளிக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டார்.

ஜீனெட் எப்ஸ்

இவர் 53 வயது அமெரிக்காவைச்சேர்ந்த பெண் விண்வெளி வீராங்கனை கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-8 மூலம் விண்வெளிக்கு சென்றவர். இவரும் 170 நாட்களைத்தாண்டி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்.

அலெக்சாண்டர் கிரெபென்கின்

42 வயதான இவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இவரும் கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 8ல் 6 மாத ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு சென்றவர். இவரும் 170 நாட்களைத்தாண்டி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்

இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட பல நாட்களாக விண்வெளி நிலயத்தில் தங்கி தனது ஆராய்ச்சியை செய்து வரும் நிலையில், விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு உடல் உபாதை ஏற்படுகிறது, அவர்கள் ஆக்ஸிஜன் இன்றி உணவின்றி தவிக்கின்றனர் என்பது வெறும் வதந்தியே...

ஸ்பேஸ் ஸ்டேஷனில், வீரர்கள் சென்ற சோயுஸ் விண்கலம் ஸ்பேஸ் க்ரூ-8 விண்கலம் ஆகியவை நிலைநிறுத்தப்பட்ட நிலையில் போயிங் விண்கலம் மட்டுமே பழுதாகி உள்ளது. ஆகவே... வீரர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் போயிங்கை தவிர்த்து மற்ற விண்கலத்தில் பூமிக்கு வர இயலும். ஆகவே வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்கிறார் பஞ்சாப்பில் உள்ள indian institute of science education and research ல் பேராசிரியராக பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் தவி.வெங்கடேஸ்வரன்..