சுனிதா வில்லியம்ஸ் புதிய தலைமுறை
டெக்

சுனிதா வில்லியம்ஸ் சென்ற ‘போயிங் ஸ்டார் லைனர்’ விண்கலத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Jayashree A

கடந்த மாதம் 5ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர்களான பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த விண்கலமானது பழுதானது. இதனால் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டு, அது தாமதமாகிறது.

சுனிதா வில்லியம்ஸ்

இந்நேரத்தில், இவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைன் விண்கலம் பற்றிய சில அடிப்படை தகவல்களை நாம் தெரிந்துக்கொள்ளலாம்....

போயிங் நிறுவனமானது விமானங்கள் ரோட்டோகிராஃப்ட், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து வரும் ஒரு அமெரிக்க நிறுவனம்.

2010ல் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகனுடன் இணைந்து போயிங் நிறுவனமானது ஸ்டார்லைனர் விண்கலத்தை உருவாக்கியது. பல போட்டிகளுக்கு இடையில், இந்த நிறுவனத்தை தனது பணியாளர்களின் விண்வெளி பயணத்திற்காக நாசா தேர்ந்தெடுத்தது.

இந்த போயிங் விண்கலத்தில் சில சிறப்பம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஒன்றல்ல, இரண்டல்ல... பத்து பயணங்கள் வரை இந்த விண்கலத்தை மீண்டும் மீண்டும் ஒருவரால் பயன்படுத்த முடியும். மேலும் 15 அடி விட்டம் கொண்ட இந்த காப்ஸ்யீலில் 7 பேர் வரை பயணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மேலும் விண்வெளியில் 7 மாதங்கள் வரை இது தாக்குப்பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

2019ல் இதன் சோதனை ஓட்டத்தை போயிங் நிறுவனம் தொடங்கியது. ஆனால் அதில் சில பிரச்னை இருந்ததால், தோல்வி அடைந்தது. மறுபடி முயற்சித்தது. மீண்டும் தோல்வி. அதன் பிறகு 2024 ஜூன் 5ம் தேதி விண்வெளியை சென்றடைந்தது.

இப்பொழுது அங்கிருந்து பூமிக்கு திரும்பி வருவதற்கான முயற்சியில் இருக்கிறது... கூடிய விரைவில் விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்போம்.!