டெக்

குடியுரிமை பெற்ற முதல் ரோபோ

குடியுரிமை பெற்ற முதல் ரோபோ

webteam

ரோபோக்களின் ஆதிக்கம் இன்று அனைத்து துறைகளிலும் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ஹுமானாய்ட் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களை உருவாக்கி அதனை வெற்றிகரமாக இயங்கவும் செய்துவிட்டன சில நிறுவனங்கள். அப்படி அறிமுகமான ரோபோதான் சோஃபியா என்னும் மனித ரோபோ. மனிதர்களுக்கான அத்தனை திறன்களும் ஒருங்கே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தானாக சிந்தித்து மனிதர்களின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் சொல்வதே இந்த ரோபோவின் சிறப்பு. ஹாங்க் காங்கை சேர்ந்த நிறுவனம் இதனை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது.

அந்த சமயத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட இந்த ரோபோ , உனக்கு ஆபத்து வந்தால் மனிதர்களை அழிப்பாயா? என நிருபர் கேட்ட கேள்விக்கு ஆமாம் மனிதர்களை அழிப்பேன் என கோபமாக பதில் கூறியது. இதனையடுத்து சோஃபியாவை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழத்தொடங்கின.

ஆனால் இதனை உருவாக்கிய நிறுவனம் பல மாற்றங்களை செய்து மீண்டும் சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. அந்த விழாவில் சோஃபியா ரோபோவே தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு , அங்குள்ளவர்களின் கேள்விக்கு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் பதிலளித்தது. மனிதர்களை அழிப்பேன் எனக்கூறினாயா என்றக்கேள்விக்கு சற்று அமைதி காத்து சாமர்தியமாக இம்முறை பதிலளித்தது சோஃபியா.

சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய நிறுவனம் இதனை தன்னகப்படுத்தி, இதற்கு குடியுரிமை வழங்கியுள்ளது. முதல் குடியுரிமை கொண்ட ரோபோ என்ற பெயர் சோஃபியாவிற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சோஃபியா தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதாகவும், பிறக்கும் குழந்தைக்கு தனது பெயரையே வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. ரோபோவின் இத்தைகைய பதில் ஒருபுறம் ரசிக்கும்படியாக இருந்தாலும், இது ஏற்புடையது அல்ல என பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியிருக்கின்றன.