டெக்

நீங்க பேஸ்புக், வாட்ஸ் அப் பிரியரா? அப்ப இதை படிங்க!

நீங்க பேஸ்புக், வாட்ஸ் அப் பிரியரா? அப்ப இதை படிங்க!

webteam

சமூக வலைத்தளங்‌களின் மீது கொண்ட தீராத மோகத்தால் அ‌வற்றுக்கு அடிமைகளாக மாறி தூக்கம் தொலைத்து வருகின்றனர் வலைதளப் பிரியர்கள்.

பொழுதுபோக்குக்காக நாம் நாடும் பொருட்கள், சிறிது காலத்தில் நம்மை அறியாமலே நமக்குப் போதையாக மாறிவிடுகின்றன. அந்த வரிசையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களுக்குள் பலரும் சிக்கி அடிமையாகிவிட்டனர். தங்களை அறியாமலேயே தூக்கத்தை அவர்கள் இழந்து வருகின்றனர். ஆனாலும் தொழில்நுட்பமயமாகிவிட்ட உலகத்தில் அவற்றின் தேவை இன்றியமையாதது என்கின்றனர் பயனாளர்கள்.

2016 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில் இந்தியாவில் சுமார் 90% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே தூக்கம் கொள்கின்றனர் என்கிறது ஆய்வறிக்கை. இந்தியாவில் 60 % மக்கள் ஏதேனும் ஒரு சமூக வலைதளங்களோடு பயணிப்பதாகவும், அவர்களில் 42 % பயனாளர்கள் பணியின் நிமித்தமாகவே பயன்படுத்துவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது‌.

சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், தூக்க குறைபாடு, மன அழுத்தம், சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். செல்போனை பயன்படுத்தும் குழந்தைகளும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவலையும் முன்வைக்கின்றனர்.

தூக்க குறைபாடு நோயிலிருந்து விடுபட தூங்க செல்வதற்கு முன்பு புத்தகம் படிப்பது, மற்றவர்களோடு உரையாடுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.