டெக்

வருகிறது ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்..!

வருகிறது ஆப்பிளின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்..!

Rasus

அமேசான் நிறுவனத்தின் எக்கோ, கூகுள் ஹோம் போலவே ஆப்பிளும் சிரியுடன் இணைந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துகிறது. வேர்ல்டுவைடு டெவலப்பர் கான்ஃபரன்ஸ் (WWDC) நிகழ்வில் இந்த அறிமுகம் நிகழ இருக்கிறது.

புதிது புதிதாக பல அதி நவீன தொழில்நுட்பத்துடன் சாதனங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் ஹோம் பாட் என்ற பெயரில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகபடுத்தப்படவுள்ளது. இந்த ஆப்பிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஐபோன், மேக் என அனைத்துடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. விர்ச்சுவல் சவுண்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவக்கப்பட்டுள்ளது. இதனை நாம் இருக்கும் இடங்களுக்கு அதாவது சமையலறை அல்லது படுக்கையறைகளுக்கு எளிதாக எடுத்து செல்லலாம்.

அமேசான் நிறுவனத்தின் எக்கோ, கூகுள் ஹோம் போலவே ஆப்பிளும் சிரியுடன் இணைந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வெளிவரவுள்ளது. சிரி என்பது நாம் வாய்ஸ் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு வாய்ஸ் மூலம் பதில் அளிக்கும் தொழில்நுட்பமாகும். மேலும் இதில் டிஸ்ப்ளே ஸ்கிரீன், சிறப்பான ஆடியோ டோன் போன்ற பல அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோனுக்கான ஐ.ஓ.எஸ் 11-ல், அப்டேட்டான இன்டர்பேஸ், புதிய வடிவத்தில் ஆப்பிள் மியூசிக் போன்றவற்றுடன் வெளியாகும் என்ற அறிவிப்பையும் WWDC நிகழ்ச்சியில் எதிர்ப்பார்க்கலாம்.