ஸ்லிம்" விண்கலம் முகநூல்
டெக்

விண்ணில் பாய்ந்தது "ஸ்லிம்" விண்கலம் - நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில் 5வதுநாடாக இணைந்த ஜப்பான்

நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் வடிவமைத்த ஸ்லிம் விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

PT WEB

இந்திய நேரப்படி இன்று காலை 4.40 மணிக்கு, ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து விண்கலத்தின் செயல்பாட்டினை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாக்ஷா, "மூன் ஸ்னைப்பர்" என இந்த திட்டத்திற்கு பெயரிட்டிருந்தது. திட்டம் வெற்றி அடைந்தால் நிலவில் தடம் பதிக்கும் 5- வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.

ஏற்கனவெ மூன்று முறை பல்வேறு காரணங்களுக்காக ஸ்சிலிம் விண்கலம் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.