டெக்

விண்டோஸ் போன்களில் ஸ்கைப் கட்..!

விண்டோஸ் போன்களில் ஸ்கைப் கட்..!

webteam

மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய விண்டோஸ் போன்களில் ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளம் விண்டோஸ் போன். ஆண்ட்ராய்டு போன்கள் வரவேற்பு பெற்ற அளவிற்கு விண்டோஸ் போன்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் விண்டோஸ் போன் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

ஆடியோ, வீடியோ அழைப்புக்கள், சாட்டிங்க் வசதி கொண்ட ஸ்கைப் சேவை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது. Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் இதுவரை செயல்பட்டுவந்தது. ஆனால் திடீரென செயல்பாட்டை தடை செய்யும் காரணத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிடவில்லை.

முன்னதாக விண்டோஸ் போன்களில் ஒருசில மாடல்களில் வாட்ஸ் அப் சேவையை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.