நாளுக்கு நாள் டெக்னாலஜி அதிகரித்துவிட்ட நிலையில் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக இணையவழி குற்றங்கள் அதிகரித்து விட்டன. 2017-ஆம் ஆண்டின் கடந்த 6 மாதத்தில் மட்டும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு சைபர் குற்றம் பதிவாகியுள்ளதாக இந்திய கணினி அவசரநிலை பதில் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் ஒருமுறை தான் ஒரு சைபர் கிரைம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இணைய வல்லுனர்கள் கூறும்போது, பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை தேர்வு செய்வதில் தவறு செய்துவிடுவதாக கூறுகின்றனர். அதிகப்படியானோர் மிக எளிதான பாஸ்வேர்டையே தேர்வு செய்வதாகவும், இதனால் ஹேக்கர்கள் எளிதாக குற்றம் புரிய முடிவதாகவும் கூறுகின்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் மிக எளிமையான பாஸ்வேர்டுகள் 25 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டுகள் தான் ஹேக்கர்கள் மிக எளிமையான திருட உதவுகின்றனவாம்.
1.123456
2.123456789
3.qwerty
4.12345678
5.111111
6.1234567890
7.1234567
8. password
9.123123
10.987654321
11.qwertyuiop
12.mynoob
13.123321
14. 666666
15.18atcskd2w
16.7777777
17.1q2w3e4r
18.654321
19.555555
20.3rjs1la7qe
21.google
22.1q2w3e4r5t
23.123qwe
24.zxcvbnm
25.1q2w3e