டெக்

இன்ஸ்டாகிராம் தளத்தில் புது அப்டேட்... ரீல்ஸுக்கென தனி டேப் 

EllusamyKarthik

டிக் டாக் செயலிக்கு மாற்றாக கடந்த ஜூலையில் இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட் வீடியோ மேக்கரான ‘ரீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது. 

பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் மாதிரியான நாடுகளை தொடர்ந்து ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நான்காவது நாடாக இணைந்தது இந்தியா. தற்போது அமெரிக்கா உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸுக்கென தனி டேபை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த வசதி இந்தியாவில் இருக்கும் இன்ஸ்டா பயனர்களுக்காக பிரேத்யேகமாக அறிமுகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஷார்ட் வீடியோ மேக்கிங்கில் இந்திய மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் கிரியேட்டிவிட்டியின் காரணமாக இன்ஸ்டா நிறுவனம் ரீல்ஸ் டேபை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும். அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக டூல்ஸ் வசதியையும் இணைக்க திட்டமிட்டுளோம்’ என தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக் இந்தியாவின் இயக்குனர் மனீஷ் சோப்ரா.