டெக்

சனி கோளில் இருந்து காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்

webteam

சனி கோளை சுற்றி இருக்கும் தட்டையான வளையங்கள் சனிக்கோளைவிட இளமையாக இருப்பது நாசாவின் காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சூரியக்குடும்பத்தில் 6 ஆவது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மற்றக்கோள்களை விட சனிக்கோளுக்கு சிறப்பு உண்டு. அதாவது சனிக்கோளில் மட்டு‌மே மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற மேகங்கள் கொண்ட வளையங்கள் சுற்றி வருகின்றன. 

சனி கோளை நாசாவின் காசினி விண்கலம் சுற்றிவந்து கொண்டிருந்தது. இந்த விண்கலம் கடந்த 2017 ஆம் ஆண்டு சனி கோளின் மேற்பரப்பில் திட்டமிடப்படி இதன் இறப்பு முடிவுக்கு வந்தது. அப்போது அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மூலம் வளையங்கள் பற்றி தகவல்கள் தெரியவந்துள்ளது. 

இந்த வளையங்கள் 99 சதவிகிதம் பனிக்கட்டியாகவே உள்ளன. சனிக்கோள் உருவாகி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னரே இந்த அழகிய வளையங்கள் உருவானதும், தற்போது அந்த வளையங்கள் சனிக்கோளை விட இளமையாக இருப்பதும் காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விண்கற்களின் மோதலால் இந்த வளையங்கள் உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.