டெக்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 வெளியிட்டவுடன் ட்ரெண்டானது!

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 வெளியிட்டவுடன் ட்ரெண்டானது!

webteam

சாம்சங் நிறுவனம் புதிய மாடல் எஸ் 9 ஸ்மார்ட் போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ரகங்களில் வெளிவருகிறது. அதன்படி 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஸ் 9ன் விலை ரூ.57,900 ஆகும். 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஸ் 9ன் விலை ரூ.65,900 ஆகும். கேலக்ஸி எஸ் 9 ப்ளஸை பொருத்தவரையில் 64 ஜிபி ரூ.64,900 ஆகவும், 256 ஜிபி ரூ.72,900 ஆகவும் விற்பனைக்கு வருகிறது. வரும் 16ஆம் தேதி சந்தைகளில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு, ஃபிலிப்கார்டில் தற்போதே புக்கிங் தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், கோரல் புளூ, லிலாக் பர்ப்பிள் உள்ளிட்ட வண்ணங்களில் வெளிவருகின்றது. 

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:

டிஸ்ப்ளே : 5.8 இன்ச் ஹெச்டி, கொரில்லா கிளாஸ் 
ரேம் : 4 ஜிபி 
இண்டர்னல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி / 256 ஜிபி 
ஆண்ட்ராய்டு : ஓரியோ 8.0 
டூயல் சிம் கார்டு வசதி 
கேமரா : பின்புறம் 12 எம்பி இரட்டைக் கேமரா, முன்புறம் 8 எம்பி
பேட்டரி : 3000 எம்ஏஹெச் திறன்               

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 பிளஸ் சிறப்பம்சங்கள்:
டிஸ்ப்ளே : 6.2 இன்ச் ஹெச்டி, கொரில்லா கிளாஸ் 
ரேம் : 6 ஜிபி ரேம்
இண்டர்னல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி / 256 ஜிபி 
ஆண்ட்ராய்டு : ஓரியோ 8.0 
டூயல் சிம் கார்டு வசதி 
கேமரா: பின்புறம் 12 எம்பி இரட்டைக் கேமரா, முன்புறம் 8 எம்பி
பேட்டரி : 3500 எம்ஏஹெச் திறன்