சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 9 மாடலை வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 9, வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில் தங்கள் புதிய ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 9ஆம் வெளியிடவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன் வெளியாகவுள்ளது.
இதனை முதலில் அமெரிக்காவின் நியூயார்க்கில் சாம்சங் நிறுவனம் வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேலக்ஸி நோட் 9 உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும். இதில் 12 எம்பி இரட்டைக் கேமரா பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது ஆண்ட்ராய்ட் ஓரியோ 8.1 வெர்ஷன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வீடியோக்கள் பார்க்க மற்றும் கேம்கள் விளையாடுவதற்காக இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்புற கேமராவின் கீழே கைரேகை சென்சார் உள்ளது.