சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும், இதன் விலை 72,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தின் இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பு அம்சங்கள்:
மேலும் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED பிக்சல் டிஸ்ப்ளே, 8895 குவால்காம் ஸ்நாப்டிராகன் 835 SoC, 3000 mAh பேட்டரி, 6ஜிபி ரேம், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்ஃபோன் பிளாக், புளு மற்றும் கோல்டு உள்ளிட்ட வண்ணங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 8 விலை 999 யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 72, 000 ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.