அண்மையில் பிளாக்பெரி நிறுவனம் தனது செல்போன் சேவையை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அறிவித்தது குறித்து நடிகை சமந்தா, 'ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
முழு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட ஒரு மொபைல் போனை 1990களின் இறுதியில் மக்களின் கைகளில் தவழத்தொடங்கியது. 2000ம் ஆண்டுக்கு பிறகு மெல்ல மெல்ல இது பிரபலமடைந்து, பிளாக் பெரி நிறுவனத்தின் மவுசு கூட ஆரம்பித்தது. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் மொபைல்களுக்கான பட்டியலில் பிளாக்பெரி மொபைல்களுக்கு தனி இடம் இருந்தது. காரணம் இதுவரை இருந்த கீபோர்டில் தனி மாற்றத்தை கொண்டுவந்து, குவெர்டி கீ போர்டை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தது பிளாக் பெரி.
2000 களின் முற்பகுதியில் பிளாக்பெர்ரி மொபைல்கள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடையே ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தன. இதையடுத்து, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் ஆதிக்கத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் பிளாக் பெரி மொபைல், இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதியுடன் தனது மொபைல் சேவைகளை நிறுத்தப்போவதாக பிளாக்பெரி நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'பிளாக்பெர்ரி மொபைல் சேவை ஜனவரி 4 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.இது செல்போனுக்கான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது." என்ற இமேஜ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதற்கு கேப்ஷனாக, 'இந்த செய்தி வலியை தருகிறது''என பதிவிட்டுள்ளார். அவர் மட்டுமல்ல பலரும் சமூகவலைதளங்களில் பிளாக்பெரிக்கு தங்களது பிரியா விடை அளித்துவருகின்றனர்.