மக்களின் பிரச்னைகளுக்கு பதிலளிக்கும் உலகின் முதல் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் அரசியல்வாதியை நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த நிக் கெரிட்சென் என்ற 49 வயது விஞ்ஞானி, சாம் என்று பெயரிடப்பட்ட மாய அரசியல்வாதியை கண்டுபிடித்துள்ளார். சாம் என்ற மாய அரசியல்வாதி ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் மக்களுக்கு பதிலளிக்கும் வல்லமை படைத்தவர். இதற்காக மாய அரசியல்வாதி சாம் தொடர்ந்து கற்று வருகிறார்.
உதாரணமாக, நமது ஊரில் உள்ள பள்ளிகள், வீடுகள், குடியேற்றம் உள்ளிட்டவைகளி்ல் அரசின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நமது கேள்விகளுக்கு தெளிவான பதிலை தரவல்லவர் மாய அரசியல்வாதி சாம்.
அரசியல் நெருக்கடி மற்றும் சமூக சூழல் சரியாக இல்லாத நேரங்களில், பல்வேறு நாடுகளில் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை அறிந்து கொள்ள சாம் உதவுவார் என்று டெக் இன் ஏசியா அமைப்பு கூறியுள்ளது.
மாய அரசியல்வாதியை தேர்தலில் வேட்பாளராக்க சட்டத்தில் இடமில்லை, ஆனால் 2020 ஆம் ஆண்டிற்குள் வேட்பாளராக்கும் அளவிற்கு சாமை வளர்த்து விடுவோம். தற்போதைய அரசியல் சூழலில் ஒரு சார்பாக செயல்படுவது நடைமுறையாகிவிட்டது. ஆனால் சாம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பதிலளிப்பார் என்று நிக் கூறுகிறார்.