டெக்

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் தானாகவே இயங்கும் கார்

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் தானாகவே இயங்கும் கார்

webteam

செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் நிறுவனங்களின் மாநாட்டில் ரோபோரேஸ் நிறுவனம் இதைக் காட்சிப்படுத்தியுள்ளது. கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தானியங்கி கார்கள், முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படுகின்றன. கார் சக்கரத்தின் அசைவுகள் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்துக்குச் செயல்படும் திறன் கொண்ட இந்த காரை பந்தயத்துக்கும் பயன்படுத்தலாம்.