டெக்

ரூ.99 செலுத்தாமல் ஜியோ ப்ரைம் உறுப்பினராவது எப்படி..?

ரூ.99 செலுத்தாமல் ஜியோ ப்ரைம் உறுப்பினராவது எப்படி..?

webteam

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ப்ரைம் உறுப்பினராவதற்கு ரூ.99 செலுத்தாமல் ஒரே ஒரு அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்தால் போதும் என்ற புதிய அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாய்ஸ் கால், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் தற்போது கட்டணமின்றி வழங்கி வருகிறது. இந்த இலவச சேவை வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜியோ ப்ரைம் உறுப்பினராக மாறினால் ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் இப்போதைய இலவச சேவையை போன்று தொடர்ந்து பெறலாம் என அறிவித்திருந்தது.

அதன்பிறகு ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக, ஆண்டு கட்டணமாக ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. ஆனால் தற்போது ஜியோ ப்ரைம் உறுப்பினராக ஜியோ மணி என்ற இ-வாலட் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்து அதன் மூலம் ரூ.99 மற்றும் ரூ.303 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்-பேக் சலுகை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.