ஸ்மார்ட்போன் சந்தையில் கோலோச்சி வரும் சியோமி நிறுவனத்தின் சமீபத்திய வரவாக வெளிவந்துள்ளது ரெட்மி 9 பிரைம். பட்ஜெட் ரக மாடலாக அறிமுகமாகியுள்ளது இந்த போன்.
வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoCஇல் இயங்கும் இந்த போனில் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர் வசதியை பயன்படுத்தி கேமிராவில் படங்களை பிடிக்கலாம். 5020 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது.
பிங்கர் பிரிண்ட் சென்சார், 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது. நான்கு கலரில் கிடைக்கும் இந்த போனில் இரண்டு நானோ சிம் கார்டுகளை பயனப்டுத்தலாம். ஆண்ட்ராய்ட் 10இல் இந்த போன் இயங்குகிறது. 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி மற்றும் ஐபிஎஸ் கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கும், 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன்11,999 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது. அமேசான் மூலம் போனை வாங்க முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் விற்பனையாக உள்ளது.