4 ஜிபி மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வசதியுடன் ஓப்போ ரியல்மி ஸ்மார்ட்போன் வரும் 18ஆம் தேதி வெளியாகிறது.
இந்தியச் சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில்
அனைத்து நிறுவனங்களும், புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இதில் பட்ஜெட் விலையில் வெளியாகும்
ஸ்மார்ட்போன்கள் தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவருகின்றன. இதை அறிந்துகொண்ட மொபைல் நிறுவனங்கள், குறைந்த
விலை ஸ்மார்ட்போன்களை அதிகம் வெளியிடுகின்றன.
இந்த வகையில் ஓப்போ மொபைல் நிறுவனம் ரியல்மி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வரும் 18ஆம் தேதி வெளியிடுகிறது.
சில்வர் வண்ணத்தில் வெளியாகும் இந்த போன், ரியல்மி மாடலின் ஒன்றாம் ரகமாக வெளியாகிறது. இது வெளியிடப்பட்ட பின்னர்,
மேலும் இரண்டு ரகங்கள் வெளியாகும். 18ஆம் தேதி வெளியாகும் ரியல்மி 1 ரகத்தை பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டெர்நல்
ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக மைக்ரோ கார்டு பொறுத்தி ஸ்டோரேஜை அதிகரித்துக்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்கு தளத்துடன், இரட்டை சிம் கார்டுகள் பொறுத்தும் வசதி உள்ளது. இரண்டு சிம் கார்டுகளும் வோல்ட்
வசதி உடையது. 6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு, அதில் 84.75% திரையாக அமைக்கப்பட்டுள்ளது. மிடியா டெக் அக்டோ-கோர்
பிராஸசரும் உள்ளது. பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் விளக்குடன் 13 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவும்
பொறுத்தப்பட்டுள்ளது. 3410 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதன் விலை ரூ.10,990 ஆகும். இந்த
ரகம் மட்டுமின்றி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் ஆகிய
இரண்டு ரகங்களும் ரியல்மி மாடலில் வெளிவரவுள்ளன.