டெக்

கொரிய நிறுவனத்தின் வசம் செல்லும் பப்ஜி : மீண்டும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு..!

கொரிய நிறுவனத்தின் வசம் செல்லும் பப்ஜி : மீண்டும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு..!

webteam

பப்ஜி கேம் செயலியின் மொத்த கட்டுப்பாட்டையும் தென் கொரிய நிறுவனம் வாங்கயிருப்பதால் இந்தியாவில் மீண்டும் அந்த கேம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையான்மை நலன் கருதி 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை அண்மையில் தடை விதித்தது. இதில் பப்ஜி கேம் செயலியும் ஒன்று. சீனா நிறுவனமான டென்செண்ட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பப்ஜி கேம் செயலியை, இந்தியாவில் 33 லட்சத்திற்கும் மேலானோர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் திடீர் தடையால் அந்த கேமின் நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது. இருப்பினும் பப்ஜி இன்னும் இந்திய பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது விரைவில் பயன்படுத்தமுடியாத நிலைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழில்நுட்பத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வ இடத்தை பிடிப்பதற்கு பப்ஜி கார்ப்ரேஷன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக தங்கள் செயலின் கட்டுப்பாடுகள் முழுவதையும் சீன நிறுவனமான டென்செண்ட்டிடம் இருந்து மாற்றி, தென் கொரிய நிறுவனம் ஒன்றின் வசம் கொண்டு செல்லவுள்ளது. தொழில்நுட்ப கொள்கை ஒப்பந்தத்தின் படி, தென் கொரிய செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவுக்கு பப்ஜி கார்ப்ரேஷன் சென்றுள்ளது. இதனால் இந்தியாவில் மீண்டும் பப்ஜி அதிராப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.