டெக்

‘Battlegrounds Mobile India’: 50 மில்லியன் டவுன்லோடை கடந்தது பப்ஜியின் புது வெர்ஷன்

‘Battlegrounds Mobile India’: 50 மில்லியன் டவுன்லோடை கடந்தது பப்ஜியின் புது வெர்ஷன்

EllusamyKarthik

இந்தியாவுக்கான பப்ஜியின் புது வெர்ஷனான ‘Battlegrounds Mobile India’ மொபைல் கேம் இந்தியாவில் அறிமுகமாகி இரண்டு மாத காலம் கூட நெருங்காத நிலையில் 50 மில்லியன் டவுன்லோடை கடந்துள்ளது. இது கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த செப்டம்பரில் தடை விதித்தது ஒன்றிய அரசு. அதில் மல்டி பிளேயர் மொபைல் கேம் அப்ளிகேஷனான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது.  

இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்து வெளியிட்டது. முதலில் முன்பதிவை தொடங்கிய நிறுவனம் பிறகு அதை வெளியிட்டது. 

இந்த கேம் தற்போது ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. விரைவில் iOS பயனர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.