WASP-39 b கோள் நாசா
டெக்

ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த புது கோள்.... பகல், இரவு மாற்றமே இருக்காதாம்! ஏன் அப்படி?

Jayashree A

நமது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன். இது உட்பட நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோளையும் தனித்தனியாக ஆராய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். ஆனால் அது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு கோளும் பூமியிலிருந்து பல மில்லியன் தூரம் தொலைவில் இருப்பதால், அங்கு விண்கலத்தை செலுத்தி ஆராய்வது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. இருப்பினும் அதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டே வருகின்றனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

இத்துடன், ‘சில தொலைநோக்கியின் உதவியுடன் சூரிய குடும்பத்தை தாண்டி வேறு கிரகத்தில் ஏதாவது உயிரிணங்கள் இருக்கிறதா...?’ என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதில் விஞ்ஞானிகளுடன் இணைந்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முக்கிய பங்காற்றி வருகிறது. ஜேம்ஸ் வெப் தனது கண்களால் பல மில்லியன் தொலைவில் இருக்கும் கிரகங்களை கண்காணித்து, அவற்றின் அவதானிப்பு, அவற்றின் செயல்பாடுகள் ஆகியவற்றை நமக்கு தெரிவித்துக்கொண்டு இருக்கிறது.

ஜேம்ஸ் வெப்பின் ஆராய்ச்சி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியால், கருந்துளைகள் பற்றியும், விண்மீன் வெடிப்பு பற்றியும் தெரிந்துக்கொண்டு அதைப்பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

WASP-39 b கோள்

இந்நிலையில் சமீபத்தில் WASP-39 b என்ற கோள் பற்றிய ஆராய்சியில், WASP-39 b என்பது G வகை நட்சத்திரத்தை சுற்றி வரும் வாயுக்கள் நிறைந்த ஒரு கோள் என்பது தெரியவந்துள்ளது. இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நமது வியாழன் கிரகத்தை விட 1.3 மடங்கு பெரியது. தனது சுற்றுப்பாதையில் G நட்சத்திரத்தை (அதாவது சூரியன்) சுற்றி முடிக்க 4.1 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

இரவுமில்லை, பகலுமில்லை... எல்லாம் எங்களுக்கு ஒன்னுதான்!

WASP-39 b கோளின் ஒருபக்கம் பகலாகவும் ஒரு பக்கம் இரவாகவும் எப்பொழுதும் காணப்படுகிறது. காரணம், அங்கு சூரியனை அந்த கோள் சுற்றும். ஆனால் தன்னைதானே சுற்றிக்கொள்வதில்லை. பூமியை பொறுத்தவரை, பூமி தன்னைதானேவும் சுற்றும், சூரியனையும் சுற்றும். அதனால் நமக்கு இரவு, பகல் வரும். ஆனால் அந்த கோள் அப்படியல்ல. சூரியனை மட்டுமே சுற்றுகிறது. அதனால், அதில் இரவு பகல் மாறுவதே இல்லை.

WASP-39 bல் காலை மற்றும் மாலை இடையேயான வெப்பநிலை வேறுபாடு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாலை சுமார் 300 ஃபாரன்ஹீட் டிகிரி (சுமார் 150 செல்சியஸ் டிகிரி) வெப்பமாகத் தோன்றியது. வெவ்வேறு மேக மூட்டத்திற்கான ஆதாரங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி அந்த கிரகத்தில் எப்போதும் காலை பகுதி மாலையை விட மேகமூட்டமாக இருக்கும் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

WASP-39 b வளிமண்டலம்

WASP-39b இன் வளிமண்டலத்தின் வெப் ஸ்பெக்ட்ரா, கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நீர் நீராவி மற்றும் சோடியம் ஆகியவற்றின் இருப்பை வெளிப்படுத்தியது. இது முழு பகல்/இரவு எல்லையைக் குறிக்கிறது. ஒரு பக்கத்தையும் மற்றொன்றையும் வேறுபடுத்துவதற்கான விரிவான குறியீடு எதுவும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்!