டெக்

உடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை

உடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை

webteam

உயிரணுக்களால் மனிதனுக்கு பிறவிலேயே ஏற்படும் உடல்குறைபாடுகளை தடுக்கவும், ஆராக்கியமான மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறையை கண்டுபிடித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 
அமெரிக்காவின் ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் உடல் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை சேர்க்கும் முறையும் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் குறைபாடுகள் அறவே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.