phonepe web
டெக்

மிகப்பெரிய சரிவுக்குபிறகு ரூ.5,000 கோடி வருவாய் ஈட்டிய Phonepe.. கடந்தாண்டை விட 74% அதிகம்!

Rishan Vengai

நவீனகால வழக்குமுறையில் சூப்பர் மால், சூப்பர் மார்க்கெட் தொடங்கி பெட்டிக்கடை, இளநீர் கடை வரை UPI பணப்பரிவர்த்தனை வந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் பணம் வைத்திருப்பதை உறுதிசெய்வதில்லை. மாறாக எல்லோரும் தங்கள் மொபைலில் ‘PhonePe, GPay மற்றும் Paytm’ முதலிய யுபிஐ ஆப்களை பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

அதிலும் PhonePe பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. சிலர் ஜிபே இல்ல ஃபோன்பே-தான் இருக்கு என சொல்லும் அளவு ஃபோன்பே அதிகப்படியான வாடிக்கையாளர்களின் சேவையை பெற்றுவருகிறது.

phonepe

இந்நிலையில்தான் கடந்தாண்டு வருவாயை விட சுமார் 74% சதவீதம் அதிகப்படியான வருவாயை 2023-2204 நிதியாண்டில் ஈட்டியுள்ளதாக ஃபோன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

5,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை!

2022-2023 நிதியாண்டில் PhonePe வருவாய் ரூ.2,914 கோடிவருவாயாக நஷ்டத்தில் இருந்த நிலையில், தற்போது 74% அதிகரித்து 2023-24 நிதியாண்டில் ரூ. 5,064 கோடியாக உச்சம்பெற்றுள்ளது.

2022-2023 நிதியாண்டில் ESOP செலவுகள் போக 738 கோடி ரூபாய் நஷ்டத்துடன் ஒப்பிடும் போது, 2023-2024 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய சரிசெய்யப்பட்ட (PAT) லாபமாக 197 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல அதன் தனியான பேமெண்ட்ஸ் வணிகமானது 2022-23-க்கான ரூ.194 கோடி நஷ்டத்துடன் ஒப்பிடும்போது, 2023-2024-ல் ரூ. 710 கோடி லாபமாக சரிசெய்யப்பட்ட PAT-ஐ பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை PhonePe நிறுவனம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

phonepe

லாபம் குறித்து பேசியிருக்கும் ஃபோன்பே சிஇஒ, "முதலீடுகள் மற்றும் மூலதன ஒதுக்கீட்டை மேம்படுத்துதல், பன்முகப்படுத்தப்பட்ட வருவாய் மாதிரியை உருவாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படுதல் முதலிய எங்களின் நடவடிக்கைகள் நீடித்த எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.