Online-ல் பட்டாசு  புதிய தலைமுறை
டெக்

மக்களே உஷார்! - Online-ல் பட்டாசு வாங்குபவர்கள் கவனத்திற்கு! இதையெல்லாம் கவனிக்க மறந்துடாதீங்க!

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், அதனை பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள் போலி இணையத்தளத்தை உருவாக்கி மக்களிடம் பணம் பறித்துள்ளனர்.

PT WEB

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், அதனை பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள் போலி இணையத்தளத்தை உருவாக்கி மக்களிடம் பணம் பறித்துள்ளனர்.

இது குறித்து இணையத்தள குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குற்றவாளிகள் பட்டாசுகளை குறைந்த விலையில் யூடியூப்பில் விளம்பரமாக பதிவிடுகின்றனர்.

இதனை நம்பும் வாடிக்கையாளர்கள், தொடர்பு கொள்ளும் போது ஆர்டர் செய்து ஸ்கிரீன் ஷாட்டை வாட்ஸ் அப்பில் பகிருமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் https://luckycrackers.com/ என்ற இணையத்தளத்தில் ஆர்டர் செய்து பணம் செலுத்தியவுடன் அந்த இணையத்தளம் அணுக முடியாமல் போய்விடுகிறது.

எனவே இதுபோன்ற மோசடிகளை தடுக்க வேண்டுமெனில் சில வழிமுறைகளை கடைப்பபிடிக்க வேண்டும். முதலில் நீங்கள் வாங்கும் இணையத்தளத்தின் சட்டப்பூர்வமான தன்மையை சரிபார்க்க வேண்டும்.

பிரபலமில்லாத இணையத்தளங்களில் கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தை தேர்வு செய்து ஆர்டர் செய்யப்பட்ட பொருள் டெலிவரி செய்யப்படுகிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

மேலும் போலி இணையத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்திருந்தால், கடவுச் சொற்களை மாற்றுவது அவசியம்.” என்று இணையத்தள குற்றப்பிரிவினர் வலியுறுத்தினர்.