டெக்

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்

Veeramani

இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்யும் பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.

ராமர் கோயில் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத்தின் மரணம் போன்றவற்றைக் குறிவைத்து போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பிய  20 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தான் ஆதரவு வலைத்தளங்களை மத்திய உளவுத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.

காஷ்மீர், இந்திய இராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், விவசாயிகள் போராட்டம், ராமர் கோயில், பிபின் ராவத் போன்ற இந்தியா தொடர்பான பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த சேனல்கள் போலி செய்திகளைப் பரப்புகின்றன" என இது தொடர்பாக பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “யூடியூப் சேனல்களின் நெட்வொர்க்கைக் கொண்ட நயா பாகிஸ்தான் குழு (NPG) மூலம் இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதனைத் தவிர, இந்தியாவிற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பும் சில தனியான யூடியூப் சேனல்களையும் இந்திய அரசாங்கம் முடக்கியது. இந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற யூடியூப் சேனல்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் ஜனநாயக செயல்முறைக்கு அச்சுறுத்தல் விளைவிக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்பட்டது, எனவே சட்டவிதிகளின்படி இந்த சேனல்கள் முடக்கப்பட்டது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது