டெக்

உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய கேமிங் நிறுவனங்கள்!

உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய கேமிங் நிறுவனங்கள்!

EllusamyKarthik

உக்ரைன் மீது போரிட்டு வருகிறது ரஷ்யா. அதற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. சில நாடுகள் பொருளாதாரத் தடையும் விதித்துள்ளன. சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது நிறுவன செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளன சில கேமிங் நிறுவனங்கள்.

  

எபிக் கேம்ஸ், ஆக்டிவிஷன் Blizzard, CD Projekt RED, Bloober Team, EA ஸ்போர்ட்ஸ், நிண்டெண்டோ என பன்னாட்டு கேமிங் மற்றும் கேமிங் வடிவமைப்பு நிறுவனங்கள் தங்களது வணிகம் மற்றும் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனை அந்நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும் உள்ளன. 

“உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் எங்கள் நிறுவனத்தின் புதிய கேமிங் விற்பனையை நிறுத்தி வைக்கிறோம். உக்ரைன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என ஆக்டிவிஷன் Blizzard நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.