வரும் மார்ச் 23-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9 சீரிஸ் லான்சுடன் இணைந்து ஸ்மார்ட் வாட்சை அறிமுக செய்ய உள்ளது அந்நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக ட்விட்டரிலும் அறிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட் வாட்ச் கூகுள் வேர்(google wear) OSக்கு மாற்றாக ஸ்மார்ட் வேர் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லாவ் உறுதி செய்துள்ளார்.
“ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தும் பயனர்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்த OSஇல் இந்த வாட்ச்சை டிசைன் செய்துள்ளோம். பேட்டரி, செயல்பாடு என அனைத்திலும் இது அசத்தும்” என பீட் லாவ் தெரிவித்துள்ளார்.
இந்த வாட்ச் மூலம் நேரடியாக ஒன்பிளஸ் டிவியை இயக்கலாம் எனவும், 20 நிமிடத்தில் ஒரு வாரத்திற்கான சார்ஜை ஏற்றி விடலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோ வொர்க் டிடெக்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், வார்ப் சார்ஜ் மாதிரியான வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. பார்ப்பதற்கு அசப்பில் வட்ட வடிவிலான வாட்ச் போலவே இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.