டெக்

கசிந்தது ஒன் ப்ளஸ் 6! - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்?

webteam

ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீடு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

சீன செல்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ் தனது அடுத்தடுத்த மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது.  தற்போதுள்ள இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனைகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது. இதில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு, புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்திய சந்தைகளில் கூடுதல் வசதிகளுடன் வெளிவரும் அதிநவீன ஸ்மார்ட்போன்களே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெருகின்றன. 

இதனால் பல முன்னணி மொபைல் நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களை கூடுதல் வசதிகளுடன் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்துடன் இருக்கும் வாடிக்கையாளர்களில் பலரும், ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை நோக்கி காத்திருக்கின்றனர். சிலர் அதன் சிறப்பம்சங்கள் தெரிந்தால், எந்த ஸ்மார்ட்போன் வாங்குவது என்ற தங்களின் திட்டத்தில் மாற்றம் செய்யலமா? வேண்டாமா? என சிந்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒன் ப்ளஸ் 6 மாடல் ஸ்மார்ட்போனின் விலை, வெளியாகும் தேதி, சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன் விலை ரூ.39,999 ஆகும். இந்தியாவில் வரும் மே மாதம் 18ஆம் வெளியாகவுள்ளது. 

சிறப்பம்சங்கள்

ரேம் : 8 ஜிபி

இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 256 ஜிபி

ஆண்ட்ராய்டு : 8.1 ஓரியோ

சிம் கார்டு : இரட்டை நானோ சிம்

டிஸ்ப்ளே : 6.28 இன்ச்

கேமரா : பின்புறம் - 16 எம்பி (இரட்டைக்கேமரா), முன்புறம் - 20 எம்பி

பேட்டரி திறன் : 3450 எம்ஏஎச்

ஆனால் இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.