டெக்

இந்தியாவில் நவ.,21 முதல் விற்பனைக்கு வருகிறது ஒன் பிளஸ் 5டி

Rasus

ஒன் பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுக விழா நவம்பர் 16-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

ஒன் ப்ளஸ் மொபைல்கள் குறுகிய காலத்தில் மொபைல் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தனித்துவமாக விளங்கும் பிராண்டாகும். இதன் அடுத்த மாடலான ஒன்  பிளஸ் 5டி (OnePlus 5T ) ஸ்மார்ட்போனின் அறிமுக விழா நவம்பர் 16-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஆன்லைன் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முந்தைய மாடலான ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்போனை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்த புதிய மாடலில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன், 8ஜிபி ரேம் வசதி உள்ளது. மேலும் 20 மெகாபிக்ஸல் பின்பக்க கேமராவும், 16 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை, இந்தியாவில் ரூ.39,000 அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.