Whatsapp New Feature Twitter
டெக்

தவறாக மெசேஜ் அனுப்பிட்டீங்களா, இனி கவலை வேண்டாம்! இதோ வருகிறது வாட்ஸ்அப் ”எடிட் மெசேஜ்” அப்டேட்!

WhatsApp பயன்பாட்டாளர்களின் நீண்ட கால காத்திருப்பாக இருந்துவரும், “எடிட் மெசேஜ்” அப்டேட்டானது கடைசிகட்ட வேலைகளில் இருப்பதாக வாட்சப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது.

Rishan Vengai

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் பலபுதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப் ஆனது, நீண்டகாலமாக காத்திருப்பில் இருக்கும் “எடிட் மெசேஜ்” அம்சத்தை அறிமுகப்படுத்துவதில், மும்முரமாக செயல்பட்டுவருகிறது.

நம்மில் கிட்டத்தட்ட 90% மக்கள், மற்ற செயலிகளை விட தகவல் பரிமாற்ற இயங்குதளமான வாட்ஸ்அப்பை தான், அதிகமாக பயன்படுத்திவருகிறோம். குடும்பங்கள், நண்பர்கள், வேலைபார்க்கும் இடங்கள், ஆன்மீகம் என ஆரம்பித்து, பல உறவுகளின் பாலமாக வாட்ஸ்அப் இருந்துவருகிறது. இப்படி தொடர் பயன்பாட்டின் போது, நண்பர்களிடையோ அல்லது காதலர்களிடையோ வாக்குவாதங்கள், சண்டைகள் என வரும்போது, கோபத்திலோ அல்லது விரக்தியிலோ சில மெசேஜ்களை அனுப்பிவிட்டு, அல்லது தவறுதலாக ஒன்றை அனுப்பிவிட்டு, அதை உடனடியாக டெலிட் செய்துவிட வேண்டும் என்று நினைக்காத ஆட்களே இல்லை.

whatsapp

அத்தகைய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு ஏற்கனவே “டெலிட் ஃபார் எவரிஒன்” என்ற மெசேஜ் டெலிட் ஆப்சனை வாட்சப் வைத்திருந்தாலும், பல ஆரோக்கியமான உறவுகளில் அத்தகைய செயல்களும் விரிசலையே ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதற்கெல்லாம் தீர்வு காணும் வரையில், வாட்சப் ஆனது உறவுகளை மேலும் வலுசேர்ப்பதற்காக, “எடிட் மெசேஜ்” அம்சத்தை புதிதாக களத்தில் கொண்டுவரவிருக்கிறது. ”அதன்படி நீங்கள் அனுப்பிய மெசேஜை மாற்றம் செய்ய நினைத்தால், உடனடியாக உங்களால் எடிட் செய்யமுடியும்”. இந்த அம்சமானது ஒரு ஆண்டுக்கு முன்னாலேயே வாட்ஸ்அப்பால் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இது தாமதப்பட்டுகொண்டே இருந்து வந்தநிலையில், “எடிட் மெசேஜ்” அப்டேட்டின் கடைசிகட்ட வேலை நடந்துவருவதாக வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது.

“எடிட் மெசேஜ்” அப்டேட்டின் சிறப்பம்சம்!

வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள், ஒருவருக்கு மெசேஜ் செய்துவிட்டு, அதில் மாற்றம் செய்ய நினைத்தால் உடினடியாக செய்துகொள்ள முடியும். அந்த அம்சத்தை தான் இந்த புதிய அப்டேட் ஏற்படுத்தித்தருகிறது.

“எடிட் மெசேஜ்” அப்டேட்டின் படி, ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு 15 நிமிடங்களுக்குள், உங்களால் அந்த மெசேஜ்ஜை எடிட் செய்துகொள்ளமுடியும். மேலும் பலமுறை எடிட் செய்துகொள்ளவும் இந்த அம்சம் வழிவகை செய்கிறது. 15 நிமிடத்திற்குள் எடிட் செய்யவில்லை என்றால், அதற்குபிறகு உங்களால் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது.

WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கை!

வாட்ஸ்அப் ஃபியூச்சர் டிராக்கரான WABetaInfo அறிக்கையின் படி, இந்த புதிய அப்டேட்டானது விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் சென்று சேரும் வகையில், செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மெசேஜ்களை திருத்துவதற்கான 15 நிமிட காலவரம்பு குறித்து விளக்கம் அளித்திருக்கும் பீட்டா, “செய்திகளைத் திருத்துவதற்கான காலவரம்பு என்பது, உரையாடலின் நம்பகத்தன்மையைத் உறுதிசெய்யவே வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் படி, பயனர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு செய்தியை முழுமையாக மாற்றவோ, எடிட் செய்யவோ முடியாது. ஏனெனில் இந்த அம்சமானது தட்டச்சு பிழைகளை சரிசெய்ய மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

எப்படி எடிட் மெசேஜ் செய்வது?

உரையாடலில் அனுப்பப்பட்டிருக்கும் மெசேஜ்-ன், ஆப்சனில் ரிப்ளை, ஃபார்வர்டு, ஸ்டார், டெலிட் வரிசையில் புதிதாக “எடிட்” ஆப்சனும் இணைக்கப்படும். அதில் சென்று எடிட் செய்து, நீங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

Whatsapp

இதைத்தொடர்ந்து, “வாட்சப்பில் கால் செய்தால், மிஸ்டு கால் நோட்டிஃபிகேசனை இனி சிகப்பு நிறத்தில் தெரியும்படியான அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய, திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.