டெக்

எரிபொருள், சார்ஜ் இல்லாமல் இயங்கும் புதிய வாகனம்

எரிபொருள், சார்ஜ் இல்லாமல் இயங்கும் புதிய வாகனம்

webteam

திருச்சி கரு‌மண்டபம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்ற கணினி அறிவியல் பட்டதாரி, 13 ஆண்டுகால முயற்சியில், எரிபொருள் இன்றி, சார்ஜ் இல்லாமல் 45‌ கிலோமீட்டர் இயங்கக்கூடிய வாகனத்தை உருவாக்கியுள்ளார். 

இதை உருவாக்க கால்சியம் குளோரைடு, பொட்டாசியம் பெர்மாங்கனேட் உள்ளிட்ட தனிமங்களை செறிவூட்டிக்கொள்கிறார். செறிவூட்டப்பட்ட தனிமங்களில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன், ஹைட்ரஜன் மின்‌சாரமாக மாற்றப்படுகிறது. மாற்றப்படும் மின்சாரம் 10 ஆம்பியர் அளவுள்ள கொள்கலனில் சேமிக்கப்படுகிறது. கொள்கலனில் சேமிக்கப்படும் மின்சாரம் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. 

இந்த வாகனத்தில் 30 கி.மீ. வேகத்தில் 420 கி.மீ. தூரம் வரை பயணித்து சோதனையில் வெற்றி பெற்றுள்ளார். இதனை தயாரிப்பதற்கு ரூ.30000 முதல் ரூ.40000 க்குள் செலவாகும் என்கிறார் லட்சுமணன்.

இவ்வாகனத்தில் ஏசி மோட்டார் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க டிசி மோட்டர் பயன்படுத்துவதால் தேய்மானம் இருக்காது. அத்துடன் புகை மாசு, ஒலிமாசு இல்லாததால் சுற்றுச்சூழலுக்கு இது உகந்தது. மேலும் இக்கருவிக்கு காப்புரிமை பெரும் முயற்சியில் லட்சுமணன் இறங்கியுள்ளார். இதனை லட்சுமணன் வரும் ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையில் விஞ்ஞானிகள் முன் சோதனை ஓட்டம் நடத்த உள்ளார்.