டெக்

வாட்ஸ் அப்பில் மின்னும் புதிய வசதிகள்

வாட்ஸ் அப்பில் மின்னும் புதிய வசதிகள்

Rasus

உலகில் அதிக பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தனது
பயனாளர்கள் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அளிப்பது வழக்கம். அந்தவகையில்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அப்டேட்டுகளைப் பார்க்கலாம். 

சாட்களை பின் செய்யும் வசதி: 

வாட்ஸ் அப்பில் இருக்கும் ஏகப்பட்ட குரூப்களில், சில முக்கியமான சாட்களை நாம் கவனிக்க
மறக்கலாம். இதுபோன்ற பிரச்னையிலிருந்து விடுபட வாட்ஸ் அப் ஹோம் பேஜில் ஒரு சில
சாட்களை பின் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் அதிகபட்சமாக 3
சாட்களை ஹோம் பேஜில் பின் செய்து வைத்துக் கொள்ள முடியும். 

டு ஸ்டெப் ஆதென்டிகேஷன்

ஒருவரது வாட்ஸ் அப் எண்ணை மற்றவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், டு ஸ்டெப்
ஆதென்டிகேஷன் எனும் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப்
அனுப்பும் குறுந்தகவல் மற்றும் 6 டிஜிட் பாதுகாப்பு எண்ணையும் பயன்படுத்தினால் மட்டுமே
உங்கள் வாட்ஸ் அப் கணக்கினை நீங்கள் பயன்படுத்த முடியும். கூடுதல் பாதுகாப்பாக இந்த வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆப்பிள் பயனாளர்களுக்கான சிறப்பு வசதி 

ஆப்பிள் ஸ்மார்ட்போனில் உள்ள செயற்கை அறிவு தொழில்நுட்பமான சிரி (Siri) படிக்க, நீங்கள்
வாட்ஸ் அப் மெசேஜ்களை கேட்க முடியும். ஐஓஎஸ் 10.3 அல்லது அதற்கு அடுத்து வெளிவந்த
ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். மேலும், வாட்ஸ்
அப்பின் 2.17.20 வெர்ஷனில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்
 
வாட்ஸ் அப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய வீடியோ ஸ்டேட்டஸ் பெரியளவில் எதிர்ப்பை
சம்பாதித்த நிலையில், டெக்ஸ்ட் வடிவிலான ஸ்டேட்டஸ் வசதி மீண்டும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வீடியோ காலிங் பட்டன் 

வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதத்தில் சத்தமில்லாமல் வீடியோ காலிங் வசதிக்கென தனியான
பட்டனை அறிமுகப்படுத்தியது. முந்தைய வாட்ஸ் அப் வெர்ஷன்களில் அட்டாச்மெண்ட் பட்டன்
இருந்த இடத்தில் தற்போது வீடியோ காலிங் பட்டன் மின்னுகிறது.